Pandit Deenadayal Upadhyay Prashikan Mahaabhiyan – Salem District Level Camp


பண்டித் தீனதயாள் உபாத்யாயா மாவட்ட அளவிலான பயிற்சி முகாம் 🚩
சேலம் கிழக்கு மாவட்டம் | செப்டம்பர் 4 & 5
சேலம் கிழக்கு மாவட்டத்தின் பஞ்ச பூத தளங்களில் ஒன்றான தலைமைத் தளமான பேளூரில், பண்டித் தீனதயாள் உபாத்யாயா மாவட்ட அளவிலான இரண்டு நாள் பயிற்சி முகாம் சிறப்பாக நடைபெற்றது.
12 அமர்வுகள்…
12 வெவ்வேறு தலைப்புகள்…
ஒரே இலக்கு — தேசப்பணி! 🇮🇳
📌 பாரதிய ஜனதா கட்சியின் வரலாறும் வளர்ச்சியும்
📌 கட்சியின் கருத்தியல் பரிமாணங்கள்
📌 காரியகர்த்தா முன்னேற்றம் மற்றும் கடமை
📌 வேலையைப் புரிந்துகொள் – ஏற்றுக்கொள் – செயல்படுத்து
📌 பாரதத்தின் முன் உள்ள சவால்கள்
📌 அமைப்பு விரிவாக்கம்
📌 காரியகர்த்தா எப்படி இருக்க வேண்டும்?
📌 நிரந்தர திட்டங்கள் மற்றும் பூத் மேலாண்மை
📌 மோடி அரசின் ஏழைகளுக்கான திட்டங்கள்
📌 விவித் சேத்திரம்
📌 ஊடகம் மற்றும் சமூக ஊடகப் பயன்பாடு
📌 இலக்கு 2029
ஒவ்வொரு அமர்விலும் கலந்து கொண்ட தலைவர்கள் தங்களது அனுபவங்களையும், கருத்துகளையும், வழிகாட்டுதல்களையும் சிறப்பாக பகிர்ந்து கொண்டனர்.
இது வெறும் இரண்டு நாள் பயிற்சி முகாம் அல்ல…
ஒரு காரியகர்த்தா எதற்காக செயல்பட வேண்டும்?
எப்படி செயல்பட வேண்டும்?
எந்த இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும்?
என்பதை உணர்த்திய ஒரு தேசப்பணிக்கான பயிற்சிப் பயணம்! 🚩
தேநீர் இடைவேளை முதல் உணவு, தங்குமிடம் வரை அனைத்திலும் சகோதரத்துவமும் அன்பும் நிறைந்திருந்தது. ஒரு நாள் அங்கே தங்கியிருந்தாலும், வீட்டில் இருப்பதைப் போன்ற உணர்வை இந்த முகாம் ஏற்படுத்தியது. ❤️
பாரதிய ஜனதா கட்சியில் பயணிக்கும் ஒரு காரியகர்த்தா, எந்தவொரு தனிப்பட்ட சுயநலத்தையும் எதிர்பாராமல், தேச நலனையே தனது நலனாகக் கருதி, வலிமையான பாரதத்தை உருவாக்க தனது பங்களிப்பை வழங்க வேண்டும் என்ற எண்ணத்தை இந்த இரண்டு நாள் பயிற்சி முகாம் ஆழமாக உணர்த்தியது.
🇮🇳 தேசப்பற்று முதலில்!
🚩 கட்சி இரண்டாவதாக!
🙏 தன்னலம் மூன்றாவதாக!
இதுவே ஒரு காரியகர்த்தாவின் பாதை…
இதுவே தேசப்பணியின் அடையாளம்…!
🔥 இலக்கு 2029!
🇮🇳 வலிமையான பாரதம்!
🚩 வெற்றிப் பாதையில் பாரதிய ஜனதா!